1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (23:54 IST)

'பொன்னியின் செல்வன்’ சிங்கிள் பாடல் ரிலீஸ்.. வைரல் வீடியோ..!

Ponniyin selvan
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது. 
 
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற அகம் நக என்ற பாடல் வெளியாகும் என ஏற்கனவே பட குழுவினர் அறிவித்த நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகிய இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார் என்பதும் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
மிகச்சிறந்த மெலடி பாடல்களில் ஒன்றாக இந்த பாடல் அமைந்துள்ளதாக ரசிகர்கள் இந்த பாடலுக்கு கமெண்ட் எழுதி வருகின்றனர்.
 
Edited by Mahendran