வெள்ளி, 31 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2023 (22:26 IST)

‘பொன்னியின் செல்வன் 2’ பர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Ponniyin selvan
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரூபாய் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த காலத்தில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அகநக என்ற தொடங்கும்  பாடல் வரும் இருபதாம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது 
 
ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடலை க்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளதாகவும், இளங்கோ கிருஷ்ணன் பாடியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பாடல் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.