சூடு பிடிக்கும் பொங்கல் விவகாரம்; வனிதா-சாக்சி மோதல்

Last Modified செவ்வாய், 25 ஜூன் 2019 (09:23 IST)
காலையில் சாப்பிடும் பொங்கலால் வனிதா, சாக்சி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் இன்றைய பிக்பாஸ் முதல் புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது
பிக்பாஸ் வீட்டில் நேற்றைய முதல் நாள் 'வானத்தை போல' விஜய்காந்த் குடும்பம் போல் ஒற்றுமையாக இருந்தது. ஆனால் போகப்போக விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம்' குடும்பம் போல் மாறிவிட வாய்ப்பு உள்ளது. எந்த நேரத்தில் போட்டியாளர்களுக்கு இடையே மோதல் வெடிக்கும் என்றும், அந்த மோதல் என்னவாக இருக்கும் என்றும் பார்வையாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில், டைனிங் டேபிளில் அனைவரும் சுற்றி உட்கார்ந்திருக்கின்றனர். அப்போது சாக்சி, 'தனக்கு பொங்கல் பிடிக்காது' என்று கூற அதற்கு வனிதா அவரிடம் எகிறுகிறார். 'பொங்கல் உங்களுக்கு பிடிக்காதா? அல்லது உடம்புக்கு ஒத்து கொள்ளாதா? என கூற அதற்கு சாக்சி விளக்கம் அளிக்க கூட சந்தர்ப்பம் தராமல் மீண்டும் மீண்டும் தான் சொன்னதையே சொல்லி வருகிறார் வனிதா
எப்படியோ பிக்பாஸ் திட்டம் வழக்கம்போல் வெற்றிகரமாக ஆரம்பித்துவிட்டது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவால்தான் முதல் பிரச்சனை ஏற்படும் என்று ஏற்கனவே பலர் கமெண்ட் அளித்திருந்தனர். அதுவே உண்மையாகிவிட்டது. இந்த சண்டை எந்த அளவுக்கு செல்கிறது என்பதை இன்றைய முழு நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்


இதில் மேலும் படிக்கவும் :