வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (18:12 IST)

பிரபுதேவா படத்தை கைப்பற்றிய டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்!

நடிகர் பிரபுதேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு தயாராக காத்திருக்கிறது.

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு  தேவி, குலேபகாவலி, மெர்க்குறி, சார்லி சாப்ளின் 2 என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. கண்டேன் பட இயக்குனர் ஏசி முகில் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்முறையாக அதிரடி போலீஸ் அதிகாரியாக பிரபு தேவா நடித்துள்ளார்.ஜோடியாக நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை ஜெயம் ரவி நடித்த "டிக் டிக் டிக்" படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நேமிசந்த் ஜாபக் தயாரித்துள்ளார்.  இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஜபக் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் முடிந்துள்ளதாக சொல்லப்படிகிறது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.