வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 16 மார்ச் 2019 (16:19 IST)

என்னுடைய எண்ணமும் இதுதான்! பொள்ளாச்சி விவகாரத்தில் இளையராஜா பதில்

பொள்ளாச்சியில்  பெண்களை மயக்கி பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. 
ஒரு பெண்ணின் ஆபாச வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதன் பின்பே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அரசியல் தலைவர்கள் இருப்பதாக எழுந்த புகார் காரணமாகவும் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் வைரலானதாலும் பொள்ளாச்சி விவகாரம் பெரும் கவனத்தைப் பெற்றது.
 
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என திரையுலகினர் பலர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவும் கருத்து தெரிவித்துள்ளார்.
 
பொள்ளாச்சி விவகாரத்தில் மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணம், இனி இது போன்ற ஒரு சம்பவம் நிகழக்கூடாது என்றார்.