வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: சனி, 16 மார்ச் 2019 (11:10 IST)

பொள்ளாச்சி பாலியல் கொடுமை : திமுக ஆர்பாட்டத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 
பொள்ளாச்சி பாலியல் அவதாரத்தில் முறையான நீதி விசாரணை கோரி திமுக சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுகவினர் சாலை மறியலும் செய்தனர். அப்போது ஒரு பெண் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் இருந்து மண்ணை கண்ணை பிடுங்கி எறிந்து விட்டு பெண்ணை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். என்னுடைய பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என ஈரோடு  மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்தனர்.