திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 10 டிசம்பர் 2019 (09:54 IST)

’குண்டு’ படத்திற்கு பாராட்டு தெரிவித்த அரசியல்வாதிகள்

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா, முனிஷ்காந்த் நடிப்பில் உருவாகிய ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது
 
இந்த படத்திற்கு சமூக வலைதள பயனாளர்கள், விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் பாசிட்டிவ் ரிசல்ட் கொடுத்ததை அடுத்து இந்த படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பார்த்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இந்த படத்தை பழம்பெரும் அரசியல்வாதி நல்லகண்ணு, திமுகவை சேர்ந்த ஆளூர் நவாஸ், தமிழன் பிரசன்னா, மற்றும் மதிமுகவின் மல்லை சத்யா ஆகியோர் பார்த்து தயாரிப்பாளர் ரஞ்சித்துக்கும் இயக்குனர் அதியன் ஆதிரைக்கும் நேரில் பாராட்டு தெரிவித்தனர் என்பது 
 
ஏற்கனவே பிக்பாஸ் மூன்று சீசன் போட்டியாளர்களுக்காக நேற்று இந்த படம் சிறப்புக்காட்சி ஒன்று திரையிடப்பட்டது என்பதும் இந்த படத்தை பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது