செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (09:08 IST)

’தளபதி 64’ படத்தில் இணைந்த பிரபுதேவா சகோதரர்!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அவ்வப்போது சில நட்சத்திரங்கள் இணைந்து வருகின்றனர்
 
சமீபத்தில் இந்த படத்தில் ஒரு சில நட்சத்திரங்கள் இணைந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனரும் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா சகோதரர் நாகேந்திர பிரசாத், ’தளபதி 64’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
ஏற்கனவே நாகேந்திர பிரசாத் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படமான ’கில்லி’ படத்தில் விஜய்யுடன் நடித்திருந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விஜய் படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே விஜய்யின் நெருங்கிய நண்பர்களான சாந்தனு, சஞ்சீவ் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு நண்பரான பிரபுதேவாவின் சகோதரரும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை, டெல்லி மீண்டும் சென்னை என மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக படக்குழுவினர் இன்னும் ஒரு சில நாட்களில் கர்நாடகா கிளம்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது