வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (15:53 IST)

தூத்துக்குடி பிரச்சனை பற்றி உதயநிதி கலகத்தலைவன் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதா?

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கலகத் தலைவன் படத்தில் அரசியல் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் ஆன நிலையில் மகிழ்திருமேனி இயகக்த்தில் உருவாகியுள்ள படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்துக்கு கலகத்தலைவன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி வழக்கமாக ஆக்‌ஷன் கதைக்களங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் படங்களை உருவாக்குபவர். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான கலகத் தலைவன் படமும் இணையும் என்பதை டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை உறுதிப் படுத்தியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் சில காட்சிகளில் தூத்துக்குடி பிரச்சனை சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.