வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 11 மே 2022 (15:52 IST)

பிரபல தமிழ் நடிகை மீது போலீஸார் வழக்குப் பதிவு?

நடிகை மும்தாஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு  செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

 டி.ராஜேந்திரர்  இயக்கிய மோனலிசா மோனாலிசா என்ற படத்தில் அறிமுகம் ஆனவர் மும்தாஜ். இப்படத்திற்குப் பின், குஷி, லூட்டி,சாக்லேட், வேதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

தற்போது, சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் அவரது வீட்டில் 2வட மா நில சிறுமிகள் மும்தாஸ் மீது புகார் அளித்துள்ளனர்.

அதில்,  எங்களுக்கு  நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்ய விருப்பமில்லை. எங்கள் இருவரையும் சொந்த ஊருக்கு அனுப்ப அவர் மறுக்கிறார் எனத் தெரிவித்துள்ளனர்.

அண்ணா நகர் போலீஸார் சிறுமிகளை மீட்டு, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.   பின்னர், ஷனாய் நகரில் உள்ள அரசுக் காப்பகத்தில் இருவரையும் ஒப்படைத்தனர்.

மேலும், கட்டாயப்படுத்தி சிறுமிகளை வேலைக்குச் சேர்த்தது உறுதி செய்யப்பட்டால் நடிகை மும்தாஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகு தகவல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.