திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 11 மே 2022 (15:46 IST)

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த பிரபல நடிகை !

chiranjeevi prabhudeva
சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படத்தின் முன்னணி நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

சிரஞ்சீவி நடித்த 'ஆச்சார்யா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ள நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் லூசிபர் என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் ஆன ‘காட்ஃபாதர்’ என்ற படத்தில் தான் தற்போது சிரஞ்சீவி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

தமன் இசையமைக்கும் இந்த படத்தில் தற்போது பிரபுதேவா இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ள நிலையில் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணிபுரிய இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தில் ஏற்கனவே சல்மான் கான், பூரி ஜெகன் நாத் ஆகியோர் நடித்து வரும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க தன்யா ரவிச்சந்திர நடிக்கவுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் கருப்பன், பிருந்தாவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.