1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (11:43 IST)

எதற்கும் துணிந்தவனுக்கு வந்த சிக்கல்..! – சூர்யாவுக்கு கூடுதல் பாதுகாப்பு!

நடிகர் சூர்யா நடித்து விரைவில் வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதால் சூர்யாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். பழங்குடி இன மக்கள் குறித்த நிஜக்கதையை தழுவிய இந்த படம் பரவலான வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. ஆனால் இந்த படத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பும் எழுந்தது.

இதனால் சூர்யாவுக்கு கொலை மிரட்டல்கள் வந்த நிலையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகவுள்ள சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனால் நடிகர் சூர்யாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.