1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 ஜூன் 2018 (10:55 IST)

அதிகாரிகளை வேலை செய்ய சொல்லுங்கள் ; அப்புறம் யோகா பண்ணலாம் - மோடியை விளாசியை பிரகாஷ்ராஜ்

உலக யோகா தினமான இன்று பிரதமர் மோடிக்கு எதிராக பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
உலகம் முழுவதும் இன்று யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் மோடி யோகாவின் சிறப்பு குறித்து அவ்வப்போது கருத்து கூறி வருகிறார். சமீபத்தில் கூட யோகா செய்யும் வீடியோவை அவர் வெளியிட்டார்.

 
இந்நிலையில், பாஜக அரசு மற்றும் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் “நாட்டின் மிக உயர்ந்த தலைவரே. நீங்கள் ஃபிட்னஸ் சவாலில் பிஸியாக இருக்கிறீர்கள் என எங்களுக்கு தெரியும். கொஞ்சம் மூச்சை உள்ளே இழுத்து விடுங்கள். உங்களை சுற்றிப்பாருங்கள்... உங்கள் ஐஏஏஸ் அதிகாரிகளை அர்விந்த கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்ற சொல்லுங்கள். அதன்பின் உங்கள் உடற்பயிற்சியையும், யோகாவையும் செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.