1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 ஜூன் 2018 (07:23 IST)

அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'விஸ்வரூபம் 2': கமல் அறிவிப்பு

கமல்ஹாசன் நடித்து, இயக்கிய், தயாரித்த 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் குறித்த அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்.
 
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், நிகழ்ச்சியின் இறுதியில் அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே தனது விஸ்வரூபம் 2' படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் சனி அல்லது ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் ஒருநாள் இந்த சிங்கிள் டிராக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே சிங்கிள் டிராக் வெளியாவதன் மூலம் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கானவர்களிடம் இந்த பாடல் போய் சேரும் வாய்ப்பு இருப்பதால் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.