செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (22:50 IST)

ஷேர்ன்வார்னே ரொம்ப மோசம்: ஆபாச பட நடிகையின் திடுக்கிடும் புகார்

உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் ஷேர்வார்னே. சச்சின் உள்பட பல பேட்ஸ்மேன்களை தனது திறமையான பந்துவீச்சால் திணற வைத்தவர். ஆனால் அவர் அவ்வப்போது சொந்த வாழ்க்கையில் சர்ச்சையில் சிக்கி கொள்பவர்



 
 
இந்த நிலையில் அவர் மீது ஆபாச பட நடிகை ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நைட்கிளப் ஒன்றில் ஷேர்வார்னே தன்னை தாக்கியதாகவும், அதனால் அவருடைய முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும், பிரபல ஆபாச பட நடிகை ஃபாக்ஸ் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
 
மேலும் தனது காயம் பட்ட முகத்தை புகைப்படம் எடுத்து டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். ஆனால் ஷேர்வார்னேவும், ஃபாக்ஸும் அந்த நைட் கிளப்பிற்கு ஒன்றாகவே வந்ததாகவும், ஃபாக்ஸ் வேண்டுமென்றே பொய் சொல்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உண்மையை அறிய அன்றைய தினத்தின் சிசிடிவி வீடியோவை சோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அனேகமாக இன்னும் ஓரிரு நாட்களில் ஷேர்வார்னே மீதான புகார் உண்மையா? என்பது தெரிந்து விடும்