''பிசாசு -2 ''பட புதிய போஸ்டர் ரிலீஸ்..... ஆண்ட்ரியாவின் புதிய கெட்டப் ....இணையதளத்தில் வைரல்!
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு-2 படத்தின் புதிய போஸ்டர் தற்போது ரிலீஸாகியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் பிசாசு. இப்படத்தை பாலா இயக்கி இருந்தார்.
இந்த நிலையில், தற்போது, வ மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிசாசு 2.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது. பிசாசு 2படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலான நெஞ்சை கேளு என்ற பாடல் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகை ஆண்ட்ரியா தனது டுவிட்டர் பக்கத்தில், பிசாசு -2 படத்தில், கிடார் இசைப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்பாடல்தான் நாளை ரிலீஸாகிறது. இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்திற்கு இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா இசையமைத்து உள்ளார், இப்பாடலை கபிலன் எழுத, பிரியங்கா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.