1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (18:17 IST)

சூர்யா-42 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 42 படத்தின் இசையமைப்பாளர் ற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பூஜையில் சூர்யா, சிறுத்தை சிவா,  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்

இப்படம் தமிழில் இதுவரை இல்லாத அளவுக்கு பான் இந்தியா திரைப்படமாக உருவாவதால்,  தமிழ் தெலுங்கு கன்னடம் ஒரியா மராத்தி இந்தி உள்பட மொத்தம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
devisri

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் படங்களில் இது அதிக பட்ஜெட் படம் எனவும் இப்படத்தின் ஷூட்டிங் முதலில் கோவாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட  நிலையில், தற்போது முட்டுக்காட்டில் கோவாவை மேட்ச் பண்ணுவதுபபோல் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியகிறது.

2 பாகங்களாக உருவாகவுள்ள இப்படத்திற்கு சிங்கம், சிங்கம் -2. வீரம், சச்சின், வில்லு, புஷ்பா, தி வாரியர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.