திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (14:41 IST)

இம்முறை கூடுதல் பிரம்மாணம்: மிரள வைக்கும் பிக்பாஸ் வீடு!! வைரல் போட்டோஸ்..

பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் என சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
கடந்த ஜூன் மாதமே ஆரம்பிக்கவேண்டிய பிக்பாஸ் 4 சீசன் கொரோனா உரடங்கினாள் தள்ளி சென்று வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்பவர்களின் பெயர்கள் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.
அந்தவகையில் ஷிவானி நாராயாணன், சனம் ஷெட்டி, கேப்ரில்லா, நடிகை ரேகா, ரம்யா பாண்டியன், தொகுப்பாளினி அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஆண் போட்டியாளர்கள் ஆஜித், வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், அனுமோகன் என மொத்தம் 13 பேர் பங்கேற்க உள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் என சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, கடந்த 3 சீசன்களுடன் ஒப்பிடும் போது இம்முறை கூடுதல் பிரம்மாண்டமாகவே வீடு காணப்படுகிறது.