ஒடிடியில் வெளியாகவுள்ள இளம் நடிகரின் படம் !

அசோக்செல்வனின் அடுத்த பட டைட்டில் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Sinoj| Last Modified திங்கள், 22 பிப்ரவரி 2021 (20:44 IST)

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம்நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் பீஸா -2, கூட்டத்தில் ஒருவன்,தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள அப்டம் தீனி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், ரிதுவர்மா, நடிகர்நாசர் , சத்யா, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தினை ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் பிவிஎஸ் என் பிரசாத் தயாரிக்கிறார்.இப்படத்தை பாபிரீடு பி எனபர் வழங்குகிறார்.


இப்படத்தை இயக்குநர் அனி ஐவி சசி இயக்கியுள்ளார். இப்படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள நான் கேட்டேன் மற்றும் உயிர் சுழலுதே ஆகிய இரண்டு பாடல்களும் இளைஞர்களிம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தீனி படத்தின் போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவதால், இப்படம் பிப்ரவரி 26 ஆம் தேதி ஜீ பிளக்ஸ் என்ற தளத்தில் ரிலீஸாகிறது.



இதில் மேலும் படிக்கவும் :