1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (17:33 IST)

ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் லீக்கான படம்... படக்குழு அதிர்ச்சி

மலையாள சினிமாவில் உள்ள முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் டொவினோ தாமஸ். இவர் மாரி -2 படத்தில் தனுஸுக்கு வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிலையில், இவர் நடிப்பதுடன் தானே தயாரித்துள்ள கிலோமீட்டர் அண்ட் கிலோ மீட்டர் என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் கடந்த மார்ச் இரண்டாவது வாரம் ரிலீசாக இருந்த நிலையில், கொரொனா வைரஸ் தாக்கத்தால் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆன்லைனில் இப்படத்தில் காட்சிகளை யாரோ லீக் செய்ய நாயகன் டொவொனோ தாமஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகளை நீக்கும் முயற்சியில் தற்போது படக்குழு ஈடுபட்டுள்ளது . இந்த சம்பவம் மலையாள சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.