அட்றாசக்க.. "பிச்சைக்காரன் 2" படத்தின் ஹீரோயின் இவங்கதான் - வெற்றி நிச்சயம்!
நடிகரும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடித்த மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ’பிச்சைக்காரன்’. இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகிய இந்த திரைப்படம் தமிழை விட தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், வெறும் ரூ.25 லட்சத்தில் பெறப்பட்ட தெலுங்கு ரிமேக் உரிமை, கோடிக்கணக்கில் வசூலை குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதையடுத்து ‘பிச்சைக்காரன் 2’ படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்த நிலையில் அண்மையில் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பிச்சைக்காரன் 2’படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
தேசிய விருது பெற்ற ’பாரம்’ படத்தின் இயக்குனர் பிரியா கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கும் இப்படத்தில் தற்போது கதநாயகியாக நடிகை ரித்திகா சிங் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு ரித்திகா சிங் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளதால் இப்படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என நம்பலாம்.