1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (11:10 IST)

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கும் பெண் இயக்குனர்: என்ன ஆச்சு சசிக்கு?

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கும் பெண் இயக்குனர்
நடிகரும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடித்த மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ’பிச்சைக்காரன்’. இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகிய இந்த திரைப்படம் தமிழை விட தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், வெறும் ரூ.25 லட்சத்தில் பெறப்பட்ட தெலுங்கு ரிமேக் உரிமை, கோடிக்கணக்கில் வசூலை குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்த நிலையில் இன்று இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. விஜய் ஆண்டனி பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்களுக்கு குஷிப்படுத்தும் வகையில் ‘பிச்சைக்காரன் 2’படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.
 
ஆனால் இந்த படத்தை பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கவில்லை என்பதும் பெண் இயக்குநர் பிரியா கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரியா கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே ’பாரம்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் இந்த ஆண்டு வழங்கப்பட்ட தேசிய விருதில் சிறந்த தமிழ் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
விஜய் ஆண்டனியுடன் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது விஜய் ஆண்டனி இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது