1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (18:25 IST)

படுகவர்ச்சி காட்டிய ரஜினியின் பேட்ட பட நடிகை! வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!

ரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  தனது ஸ்டைலான நடிப்பினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.



இப்படத்தில் ரஜினிக்கு  ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு,  நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பேட்ட படம்  கடந்த பொங்கல் அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.  
 
இப்படத்தில் மலையாள நடிகையான மாளவிகா மோகன் சசி குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. 
 
பேட்ட படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்த இவர் நிஜ வாழ்க்கையில் அப்படியே எதிர்மறையாக காணப்படுகிறார்.  சமூக வலைதளத்தில் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது. 


 
சமீபகாலமாக இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் ஒரே கவர்ச்சியான புகைப்படமாக நிரம்பி வழிகிறது. அந்த வகையில் அண்மையில் மாளவிகா  மோஹனன் வெளியிட்ட ஒரு புகைப்படம் மிகவும் மெல்லிய ஆடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் இது என்ன கொசு வலையா என்று கிண்டலடித்து வருகின்றனர்.