திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (10:46 IST)

இந்தியன்-2 படத்தில் என்னை இப்படி பார்க்கலாம்: காஜல் பேட்டி

நடிகை காஜல் அகர்வால் பாரிஸ் பாரிஸ் படத்தை தொடர்ந்து கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இதில் ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் சினிமா அனுபவம் குறித்து பேசுகையில்,


 
“வலுவான ரோலில் நடிக்க வேண்டும் என்று தான் எல்லாருமே விரும்புவார்கள். அந்த வகையான படங்களில்இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன்.  நான் ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்றால், அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற  ஆர்வத்தை ஏற்படுத்துகிற மாதிரி இருக்க வேண்டும். புதுமையாக இருக்க வேண்டும். கதைக்கு முக்கியத்துவம் இருக்கிறதா?  என்று தான் பார்ப்பேன். வருகிற கதைகளில் வித்தியாசமானதை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.
 
எப்போதும் சவால் நிறைந்த பயணம் செய்வது என்பது ரொம்ப கஷ்டம். அதற்காக ஒரே மாதிரியான படங்களில் நடிப்பதும் கஷ்டம். இந்த இரண்டையும் சேர்த்த மாதிரி வரும் கதைகளை தேர்வு செய்கிறேன். ஏனென்றால் எனது பயணம் எனக்கு போரடிக்காமல் இருக்க வேண்டும். இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன். அதில் என்னை புதுமையாக பார்க்கலாம்.” இவ்வாறு கூறினார்.