1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (09:33 IST)

மீண்டும் வருகிறார் 90ஸ் கிட்ஸின் பேவரைட் தொகுப்பாளினி பெப்சி உமா!

ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர் பெப்சி உமா. சன் தொலைக்காட்சியில் இவர் வாராவாரம் தொகுத்து வழங்கிய நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி வைரல் ஹிட் நிகழ்ச்சி. அப்போதே அவரது கொஞ்சும் குரலுக்கு ரசிகர்கள் அதிகம்.

அதுமட்டும் இல்லாமல் அவர் அணிந்து வரும் புடவை மற்றும் நகைகள் பெண்கள் மத்தியில் வெகு பிரசித்தி பெற்றவை. ஆனால் ஒரு கட்டத்துக்குப் பின் புதிய சேனல்களின் வரவால் பெப்சி உமா காணாமல் போனார்.

அவர் உச்சத்தில் இருந்த போதே, அவருக்கு அஜித் உள்ளிட்டோரோடு நடிக்க வாய்ப்புகள் வந்ததாக சொல்லப்படுவது உண்டு.  இந்நிலையில் இப்போது கமல்ஹாசன் அவரை தன்னுடைய அன்பே சிவம் படத்தில் நடிக்க அழைத்ததாகவும், ஆனால் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாததால் அதை பெப்சி உமா மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்த உமா, சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது விரைவில் ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியில் சந்திப்போம் எனக் கூறி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.