புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (19:04 IST)

40 குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த கவின் - பிரபலத்தின் ஷாக்கிங் பேட்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் கவின் இதற்கு முன்னர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து புகழ்பெற்றவர் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், அந்த தொடரில் இருந்து அதிரடியாக விலகியதற்கான உண்மை தகவலை அந்த சீரியலின் இயக்குனர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 


 
கவின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்துக்கொண்டிருந்த போது அவருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்ததால் அதிலிருந்து அதிரடியாக விலக முடிவெடுத்தார். இதனால் அந்த சீரியலில் நடித்துக்கொண்டிருந்த சக நடிகர்களும் இயக்குனர்களும் கெஞ்சி கேட்டும் அவர் விடா பிடியாக இருந்தார். மேலும், நான் உங்களது வாழ்க்கையை பார்த்தால் நான் முன்னேற முடியாது என்று கூறிவிட்டு கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இல்லாமல் சென்றார். 
 
அதனால் அந்த சீரியலை சீக்கிரமாக முடிக்க முடிவெடுத்தோம். இதனால் லட்சக்கணக்கில் பணம் வீணானதோடு அந்த சீரியலில் வேலைபார்த்த டெக்னீஷியன்ஸ் , குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர்கள் என 40 பேரின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது. இப்படி சுயநலத்திற்காக அடுத்தவர்களின் வாழ்க்கையை வீணடித்துவிட்டார் கவின் என்று ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் இயக்குனர் பிரவீன் மனவேதனையுடன் கூறினார்.