1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (13:24 IST)

கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணுக்கு பாலியல் கொடுமை.. தன்னைத் தானே செருப்பால் அடிக்கும் தண்டனை..!

கைக்குழந்தையை வைத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கு இளைஞர் பாலியல் கொடுமை அளித்ததை அடுத்து அவருக்கு தன்னைத் தானே செருப்பால் அடிக்கும் தண்டனையை ஊர் மக்கள் வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மதுரா என்ற பகுதியில் ஆன்மீக சுற்றுலாவுக்காக கைக்குழந்தையுடன் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் வந்திருந்தார். கைக்குழந்தையுடன் அவர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவரை துரத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே அந்த இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைக்காமல் அவர்களே தண்டனை கொடுத்தனர். 10 முறை அந்த இளைஞர் தன்னைத்தானே செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஊர் மக்கள் தண்டனை கொடுத்த நிலையில் வேறு வழியில்லாமல் அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டு அந்த இளைஞர் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டார்

இது குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில் போலீசாருக்கு தகவல் சென்றடிந்ததை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது


Edited by Siva