தொடர்புடைய செய்திகள்
- இந்தியா கூட்டணி குறித்து ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்- எடப்பாடி பழனிச்சாமி
- பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? எடப்பாடி பழனிசாமி
- வெட்கமே இல்லாமல் பொய் பேசுகிறார் பழனிசாமி!- முதல்வர் மு.க.ஸ்டாலின்
- விவசாயிகளை திமுக அரசு புறக்கணிக்கிறது- எடப்பாடி பழனிசாமி
- எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தால் இரட்டை இலைக்கு எதிராக பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் -சி.ஆர்.சரஸ்வதி
பாலியல் தொந்தரவு : பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு
பழனி அருகே பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் தொந்தரவு செய்ததாக பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பழனி அருகே சாமிநாதபுரம் கிராமத்தில் பள்ளியில் காலை உணவுத் திட்டப் பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்ததாக, பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தலைமறைவாக உள்ள மகுடீஸ்வரனை போலீஸார் தேடி வருகின்றனர். இவரது மனைவி செல்வராணி புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய வந்துள்ளதாக கூறி...காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது தலைமறைவாக உள்ள மகுடீஸ்வரனை போலீஸார் தேடி வருகின்றனர்.
