தாய் வீட்டில் இதை கூட செய்ய முடியவில்லை; பிசி ஸ்ரீராம் வருத்தம்
நமது தாய் வீடு என்று நம்பிக்கொண்டிருக்கும் இந்த தேசத்தில் தண்ணீரைக் கூட சுமூகமாகப் பங்கிட்டுக் கொள்ள முடியவில்லை என்று ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிராக தமிழகம் முழுவதும் குரல்கள் ஒலித்து வருகிறது. சினிமா துறையினரும் காவிரிக்காக போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். நமது தாய் வீடு என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் தண்ணீரைக் கூட சுமூகமாகப் பங்கிட்டுக் கொள்ள முடியவில்லை. இது என் தேசப்பற்றையே சந்தேகப்பட வைக்கிறது என்று மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.