திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 12 ஏப்ரல் 2018 (13:50 IST)

டாஸ்மாக், டிவி சேனல்களை மூடுவீர்களா? நடிகர் சித்தார்த் கேள்வி

‘ஐபிஎல்லை இடமாற்றம் செய்தது போல், டாஸ்மாக் மற்றும் டிவி சேனல்களை மூடுவீர்களா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சித்தார்த்.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடந்தால் கவனம் திசை திரும்பிவிடும் என்பதற்காக, அதை எதிர்த்து பல அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ‘இதேபோல் டாஸ்மாக், டிவி சேனல்களை மூடுவீர்களா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சித்தார்த்.
 
“ஐபிஎல் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது, வாழ்த்துகள். இதேபோல் டாஸ்மாக்கையும் மூடுவோமா? அரசியல்வாதிகள் நடத்தும் எல்லா டிவி சேனல்களையும் மூடலாமா? போராட்டக் களங்களில் கட்சிக் கொடிகளைத் தடை செய்யலாமா? ஏகப்பட்ட இக்கட்டான விஷயங்கள், மனிதர்கள் நம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மொத்தமாகப் போராடுவோம” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சித்தார்த்.