திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 12 ஏப்ரல் 2018 (17:03 IST)

அடிச்சா தாங்க மாட்டிங்க: எச்.ராஜாவிற்கு சௌந்தர்ராஜா பதிலடி!

தற்போது தமிழகத்தில் காவிரி மேலண்மை வாரியம் அமைக்கக்கோரி பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பிலும் மவுன போராட்டம் நடத்தப்பட்டது. 
 
இந்த போராட்டத்தின் போது நடிகர் சத்யராஜ், இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம் என பேசியிருந்தார். இதனை கேலி செய்யும் விதமாக எச்.ராஜா புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, ராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம் என பதிவிட்டிருந்தார்.
 
அந்த புகைப்படத்தில் சில இளைஞர்களை காவலர்கள் தாக்குவது போலவும், தாக்கப்படும் இளைஞர்கள் காவலர்களிடம் கெஞ்சுவதுபோலவும் இருக்கும். அந்த புகைப்படத்தில் இருந்தது நடிகர் சௌந்தர்ராஜா.
 
எச்.ராஜாவின் இந்த ட்விட்டுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் சௌந்தர்ராஜா. அதில், என்ன சொல்ல, இது மெரினா போராட்டக் களத்தில் எடுத்த புகைப்படம். உங்க திறமை கண்டு வியக்கிறேன். வாழ்க  ஜனநாயகம். திருப்பி அடிக்கத்தெரியாம இல்ல அடிச்சா தாங்க மாட்டிங்க. வன்முறை தவறு. அதனால் பொறுமை காத்தோம், மனிதநேயத்துடன் என்று பதிவு செய்திருக்கிறார்.