வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (20:40 IST)

பவன் கல்யாண் கட்சியில் இணைந்த பிரபல டான்ஸ் மாஸ்டர்!

pawan kalyan- johny
ஜனசேனா கட்சியின் தலைவர்  பவன் கல்யாண் முன்னிலையில், இன்று டான்ஸ் மாஸ்டர் ஜானி அக்கட்சியில் இணைந்தார்.

பிரபல தெலுங்கு சினிமா நடன இயக்குனர் ஷேக் ஜானி பாஷா. இவர் தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களிலும் டான்ஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

இவர், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், அல்லு அர்ஜூன், என்.டி.ராமாராவ் ஜூனியர், ராம் பொதினேனி, ரவி தேஜா உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில்,  நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ஆலாவைகுந்தபுரமுலூ என்ற படத்தில், புட்டபொம்மா என்ற பாடலின் டான்ஸிற்காக பேசப்பட்டார்.

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் முன்னிலையில், இன்று டான்ஸ் மாஸ்டர் ஜானி ஜனசேனா கட்சியில் இணைந்தார்.