1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (15:57 IST)

தெலுங்கானா தேர்தல்; டெபாசிட் இழந்த பவன் கல்யாண் கட்சி!

pawan
தெலுங்கானாவில் போட்டியிட்ட பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி டெபாசிட் இழந்துள்ளது.



தெலுங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் அதிர்ச்சிக்குரிய வகையில் காங்கிரஸின் அதிரடி வெற்றியால் பின்னடைவை சந்தித்துள்ளது சந்திரசேகர் ராவின் கட்சி. இருந்தாலும் எதிர்கட்சியாக தகுதி பெறுவதற்கான அளவு பி.ஆர்.எஸ் பல இடங்களில் வென்றுள்ளது.

ஆனால் தெலுங்கானாவில் பாஜக பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளன. பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி இந்த தெலுங்கானா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. தெலுங்கானாவில் ஜன சேனா கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த 8 தொகுதிகளிலுமே ஜன சேனா கட்சி டெபாசிட் இழந்துள்ளது. ஆந்திராவின் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் பவன் கல்யாணுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இந்த தோல்வி பிரதிபலிக்குமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K