1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (08:06 IST)

அஜித்-விஜய் இவர்களில் யார் ஒன்? போனிகபூரின் சூப்பர் விளக்கம்!

boney
அஜித் விஜய் ஆகிய இருவருமே தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களாக இருந்து வரும் நிலையில் இவர்களில் நம்பர் ஒன் யார் என்ற சர்ச்சை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. 
 
இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அஜித்தின் துணிவு திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் எனக்கு நம்பர் 1, நம்பர் 2 என்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை என்றும் என்னை பொருத்தவரை கண்டெண்ட் தான் நம்பர் 1 என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கண்டெண்ட் இல்லை என்றால் லவ் டுடே, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் இவ்வளவு பெரிய ஹிட் ஆகி இருக்காது என்றும் ஒரு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைவது காரணம் ஹீரோக்கள் இல்லை என்றும் அந்த படத்தின் கன்டென்ட் தான் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
இதனை அடுத்து அஜித் விஜய் ஆகிய இருவரையும் அவள் நம்பர் ஒன் எனஏற்றுக் கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
Edited by Siva