திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2017 (11:51 IST)

பார்ட்டி டீசர் முத்த காட்சியில் கயல் சந்திரன்; மனைவியின் ரியாக்‌ஷன்

சென்னை 28 படத்தின் 2-ம் பாகத்துக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கும் படம் பார்ட்டி. இதில் சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய், சிவா, ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு பார்ட்டிக்காகக்  களமிறங்கியிருக்கிறார் வெங்கட்பிரபு.
வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தின் டீஸர் வெளியானது. அதில் நிவேதா பெத்துராஜும், கயல் சந்திரனும் முத்தம் கொடுக்கும்  காட்சி இடம்பெற்றது. இதை பார்த்து நிவேதாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நெட்டிசன்கள் என்னங்கடா  நடக்குது என்று கேட்டு ட்வீட் செய்துள்ளனர்.
 
இந்நிலையில் நிவேதா, கயல் சந்திரன் முத்தம் குறித்து ட்விட்டரில் விவாதமே நடந்துள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் சந்திரன் மனைவி அஞ்சனாவின் கவனத்திற்கு டுவிட்டரில் கொண்டு வந்தனர். ரசிகர்களின் டுவீட்டுகளை பார்த்த அஞ்சனா நானும்  பார்த்தேன், இதில் என்ன இருக்கிறது என்று கூலாக பதில் அளித்துள்ளார். ஆனால் அப்படியும் ஒரு சில ரசிகர்கள் அந்த  காட்சியை மட்டும் மையப்படுத்தி பல டுவிட்கள் செய்து வருகின்றனர்.