திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2018 (12:49 IST)

பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம்

ரா. பார்த்திபன் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். தமிழ்  சினிமாவில் சிலர் பேசும் தமிழ், ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதில் பார்த்திபன் பேசும் விதம் காமெடி கலந்திருப்பதால் அனைவரும் ரசிக்கும்படியாகவும்  இருக்கும்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பிறகு கீர்த்தனாவுக்கு நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தன. நடிப்பில் எனக்கு விருப்பமில்லை என எல்லா  வாய்ப்புகளையும் புறக்கணித்தார். படம் இயக்குவதே கீர்த்தனாவின் கனவு, லட்சியம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் விஷ்ணுவர்தன் அ‌‌ஜீத்தை வைத்து  இயக்கும் பெய‌ரிடப்படாதப் படத்தில் கீர்த்தனா உதவி இயக்குனராக பணிபு‌ரிகிறார் என்று செய்திகள் வெளியானது. 
 
பார்த்திபன் சமீபகாலமாக ரஜினி, கமல், ஏ.ஆர். ரகுமான் என முன்னணி பிரபலங்களை சந்தித்து வருகிறார். எதற்காக என்று இதுவரை தெரியாமல் இருந்தது.  இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அவர்களின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அவரின் திருமணம் வரும் மார்ச் 8ஆம் தேதி லீலா பேலஸில் நடைபெற இருக்கிறது. ஆனால் கீர்த்தனா திருமணம் செய்துகொள்ள போகும் நபர் யார் என்பன போன்ற விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. இந்த திருமணத்தில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.