வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (08:28 IST)

படத்தில் நடிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ள நடிகர் பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் அடுத்ததாக உருவாக இருக்கும் இரவின் நிழல் திரைப்படத்துக்காக நடிகர்கள் தேர்வு பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்துக்கான ஒத்திகைகளை இப்போது கோவளம் பகுதிக்கு அருகே பரபரப்பாக நடந்து வந்த நிலையில் இப்போது படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வுக்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதில் ‘‘இரவின் நிழலு’க்கு- என்னின் 30 வயதினர் புகைப்படத்துடன் உடனே அனுகவும்!! 16 முதல் 20 வயதுள்ள மாநிற அழகுள்ள பெண்களும் தேவை !
நன்றி
[email protected]
( தவறாகிப் போன sentence formation  So திருத்தி ...)’ எனக் கூறியுள்ளார்.