வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (16:17 IST)

சூப்பர் ஹிட் படத்தின் 2 வது பாகம்…? ஷங்கர் முடிவு!

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்த நிலையில்  இப்படத்தை மீண்டும் இயக்குவதில் தாமதம் ஆவதால் அவரது இயக்கத்தில் வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கிய ஜெண்டில்மேன்,  காதலன், முதல்வன், பாய்ஸ், நண்பர், ஜீன்ஸ் எந்திரன், 2.0  ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

சில ஆண்டுகளாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த படம் இந்தியன்2. இப்படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கடந்தாண்டு இப்படத்தின் ஷூட்டிங்கின்போது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் மீண்டும் இப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,சமீபத்தில் ஷங்கர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் நடிப்பில் ஒரு புதிய படம் இயங்குவதாக அறிவித்தார். இப்படத்தில் கியாரே அத்வானி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இப்படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற முதல்வன்  படத்தின் இரண்டாவது பாகம் என தகவல் வெளியாகிறது.

ஆனால் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் வெளியான இப்படத்தில் அவர் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.