வெள்ளி, 1 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (16:14 IST)

கெட்ட நேரம் குறுக்க வந்துடுச்சு... ரஜினியால் "சச்சின்" படம் படு தோல்வியா?

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த  2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சச்சின்.  ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள் .  2009 இல் வெளியான கமாண்டி இந்தி திரைப்படத்தின் ரிமேக் ஆக எடுக்கப்பட்டது. 
 
இப்படம் நல்ல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் அதே நாளில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி படம் வெளியாகி இந்த படத்தை பின்னுக்கு தள்ளியது. இதனால் இப்படம் படு அடைந்துவிட்டதாக அப்போதைய செய்திகள் கூறியது. 
 
இந்நிலையில் தற்போது இது குறித்து பேட்டி ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் தானு, சச்சின் படம் தோல்வி படமே கிடையாது.  200 நாட்கள் மேல் ஓடிய ஹிட் திரைப்படம் அது. சந்திரமுகி படத்துடன் சச்சின் படம் வெளியானாலும் அதற்கு தனிப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள் வசூலும் லாபத்தை கொடுத்தது என கூறியுள்ளார்.