சர்வதேச திரைப்பட விழாவில் கொண்டாடப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’
கோவாவில் நடைபெற்று வரும் 49வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பரியேறும் பெருமாள்' . சாதி கொடுமைகளை அப்பட்டமாக தோல் உரித்து காட்டி இருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் 49-வது சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் ‘பரியேறும் பெருமாள்’ படம் திரையிடப்பட்டது.
இதனை பார்த்த பல்வேறு மாநில பார்வையாளர்கள், சர்வதேச பார்வையாளர்களை இயக்குநர் மாரி செல்வராஜூற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
சமூகத்தின் முக்கியப் பிரச்சனையை இப்படம் பேசியுள்ளதாக பலரும் பாராட்டி உள்ளார்கள்.
இது அப்படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், சர்வதேச திரைப்பட விழாவில் தங்கள் படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இதனை பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.