செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (15:44 IST)

இந்தியன் ஷூட்டிங்கில் வசந்தபாலனைக் கோபித்துக் கொண்ட கமல்.. என்ன காரணம்?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இப்போது இந்தியன் 2 ஷூட்டிங் சென்னையில் நடந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட ஒருமாதம் இங்கு ஷூட்டிங் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஷூட்டிங் நிறைவடையும் போது கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்தியன் முதல் பாக ஷூட்டிங்கின் போது உதவி இயக்குனராக  இருந்த வசந்தபாலனைக் கமல் கடுமையாக கோபித்துக் கொண்டு ஷூட்டிங் முடியும் வரை பேசவில்லையாம். ஒரு காட்சியை ஷங்கர் விளக்கிக் கொண்டு இருக்கும் போது அப்படி செய்ய முடியாது என கமல் கூறியுள்ளார். ஆனால் அப்போது குறுக்கிட்ட வசந்தபாலன், அந்த காட்சியை எப்படி நடிக்கலாம் என நடித்துக் காட்டினாராம். அதனால் கமல் அவர் மீது கடுமையாக கோபித்துக் கொண்டு சென்றுவிட்டாராம். இதை வசந்தபாலன் ஒரு நேர்காணலில் அவரே வெளிப்படுத்தியுள்ளார்.

இப்போது இந்தியன் 2 திரைப்படத்தில் இரண்டாம் யூனிட் இயக்குனராக வசந்தபாலன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.