1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2020 (09:34 IST)

இவர் யாரென்று தெரிகிறதா? புடவையில் கலக்கும் குழந்தை நட்சத்திரம்!

பாபநாசம் படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த எஸ்தர் அல்லி புடவையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் உருவான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் மீனா தம்பதியின் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர் அல்லி. அதே படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்ட போது அவரே மீண்டும் அந்த வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில் இப்போது பெரிய பெண்ணாக புடவையில் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அந்த குட்டிப்பாப்பா இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டாரா என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். தற்போது அவர் ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.