1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (09:52 IST)

வேண்டாம் என்று சொன்ன கலைஞர்! முடிவை கைவிட்ட பா.விஜய்

ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பாடலாசிரியர் பா. விஜய் பேட்டி கொடுத்தார்.

 
அதில் அவர் கூறியுள்ளதாவது "ஒருமுறை கலைஞர் ஐயாவிடம் பேசிக்கிட்டு இருந்தப்போ, 'பராசக்தி' படத்தை ரீமேக் பண்ணலாமானு அவர்கிட்ட கேட்டேன். 
 
'பராசக்தி சினிமாவில் அழியாத இடத்தைப் பிடிச்ச படம். திரும்ப எடுத்தா, முந்தைய புதுசையும் பழசையும் ஒப்பிட்டுப் பார்ப்பாங்க, வேண்டாம்"னு சொல்லிட்டார்.

தனால்தான், அவருடைய 'தாய்' காவியத்தைப் படமா எடுக்கலாம்னு முடிவு பண்ணி, 'இளைஞன்' எடுத்தோம்" என்றார்.