1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 22 ஆகஸ்ட் 2018 (12:40 IST)

கேரளாவின் 14 மாவட்டங்களுக்கு நிதியுதவி அளித்த விஜய்: பெருமிதத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கேரளா வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், விஜய் நிதி உதவி  அளிக்கவில்லை என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.
இந்நிலையில் தற்போது விஜய் 70 லட்சம் ருபாய் நிதி அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது தமிழ் நடிகர்களில் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்  எப்போதுமே மக்களின் நலனுக்காக யோசிப்பவர். கேரள வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்றதும் பிரபலங்கள் பலர் நிதி உதவி கொடுத்த வண்ணம்  உள்ளனர்.
 
எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் விஜய் கேரள மக்களுக்கு எதுவும் செய்யவில்லையா என்ற பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களுக்கு ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 70 லட்சம் வழங்கியுள்ளார். மேலும் நிவாரண பொருட்கள் 15 லாரிகள் மூலமாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

 
விஜய் அனுப்பிய நிவாரண பொருட்களை கேரளா மக்களை போய் சேர்ந்துள்ளது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் தளபதி பற்றி பெருமையாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.