1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (15:58 IST)

படப்பிடிப்பை நிறைவு செய்த பா ரஞ்சித்!

பா ரஞ்சித் இயக்கிவந்த நட்சத்திரம் நகர்கிறது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது முற்றிலும் வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். வழக்கமான தன் தொழில் நுட்பக்கலைஞர்கள் இல்லாமல் நிறைய புதுமுகக் கலைஞர்களோடு இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா ஆகியவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான தென்மா இசையமைக்கிறார்.