புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:55 IST)

ஜிவி பிரகாஷின் ‘ரிபெல்’ கதை இதுதானா?

ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ரிபெல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது என்பதும் தெரிந்ததே 
 
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் மூணாறு பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் வெளியானால் மேலும் ஒரு ’சார்பட்டா பரம்பரை’ மற்றும் ’ஜெய் பீம்’ படம் போல பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் மூணாறு பகுதி மக்களின் இன்னொரு பகுதியை என்ற படம் எடுத்துக் காட்டும் என்றும் இந்த படத்தின் கதையை கேட்டதும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்றும் இந்த படம் நிச்சயம் தமிழக திரையுலகில் முக்கிய படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் 
 
மொத்தத்தில் ஜிவி பிரகாஷின் ‘ரிபெல்’ திரைப்படம் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.