வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (16:44 IST)

இன்று மாலை வெளியாகிறதா பா ரஞ்சித் & விக்ரம் படத்தின் அறிவிப்பு!

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.

இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணி குறித்து கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது அந்த கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இளையராஜா இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.