வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (08:32 IST)

என்னுடைய படம் திட்டமிட்டு தோல்விப் படமாக்கப்பட்டது… இயக்குனர் பா ரஞ்சித் ஆதங்கம்!

தமிழ் சினிமாவில் தனிப்பெரும் ஆளுமையாக உருவாகி வருகிறார் இயக்குனர் பா ரஞ்சித். வரிசையாக தன்னுடைய படங்களின் மூலமாக தலித் அரசியலை அழுத்தமாகப் பேசிவரும் அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அவர் அளித்த சமீபத்தைய பேட்டி ஒன்றில் ரஜினிகாந்துடன் தான் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றிய ‘காலா’ திரைப்படம் திட்டமிட்டு தோல்விப் படமாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அதுகுறித்து “காலா திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு திருப்தியான படமா என்றால் இல்லை. ஆனால் அது நிராகரிக்கவேண்டிய, வெறுக்க வேண்டிய படம் இல்லை. அந்த படத்தை திட்டமிட்டு தோல்விப் படமாக்கினார்கள். ஆனால் யாரும் அது குறித்து யாரும் பேசவில்லை. நான் இப்போதை அதைப் பேசினால் விவாதங்கள் உருவாகும்.

படத்தில் தரமான காதல் காட்சிகள் இருந்தன. படத்தைக் கொண்டாடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. வன்மத்தைக் கொண்டு என் படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டனர் என சொல்லவிலை. மாறாக அந்த படத்தின் தோல்விக்குப் பின்னால் சில உண்மையானக் காரணங்கள் இருந்தன. என் அடுத்த படத்தில் அந்த தவறுகளை சரி செய்ய முயற்சித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.