புதன், 18 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (07:48 IST)

தங்கலான் படத்தின் வணிகக் காரணங்களுக்காக அந்த சமரசம் செய்தோம்… பா ரஞ்சித் தகவல்!

பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. அடுத்தடுத்த நாட்களிலும் ஹவுஸ்ஃபுல்லாகி படம் வசூலில் கலக்கியது. ஆனால் அதே நாளில் வெளியான டிமாண்டி காலணி படமும் சூப்பர் ஹிட் ஆனதால் தங்கலான் வசூல் இரண்டாவது வாரத்தில் குறைந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் விமர்சன ரீதியாக படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களும் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு பேசிய இயக்குனர் பா ரஞ்சித் “தங்கலான் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 10 நிமிடமாக இருந்தது. ஆனால் நாங்கள் வணிகக் காரணங்களுக்காக நேரத்தைக் குறைத்தோம்” எனக் கூறியுள்ளார்.

படத்தில் சில இடங்கள் புரியவில்லை என ரசிகர்கள் பலர் கருத்துத் தெரிவித்து வந்த நிலையில் அதற்கான காரணம் இதுவாகக் கூட இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.