1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (13:52 IST)

சூர்யாவுக்கு ஆதரவளித்த பா ரஞ்சித்!

சூர்யாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்து உள்ளார்
 
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் ஒரு சிலர் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் சூர்யாவுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்புவது சூர்யாவை அடித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்குவது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த நிலையில் இணையதளங்களில் சூர்யாவுக்கு ஆதரவாக #westandwithsurya என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் பா ரஞ்சித் தனது டுவிட்டரில் இதே ஹேஷ்டேக்கை பதிவு செய்து சூர்யாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் ரஞ்சித்துக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது